அதிரடிக் கழிவு விலையில் Moto G5S ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
229Shares
229Shares
lankasrimarket.com

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய Moto G5S ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்து வைத்தது.

இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 29ம் திகதி வரை அமெரிக்காவில் முன்பதிவு செய்பவர்களுக்கு 50 டொலர்கள் விலைக்கழிவு வழங்கிவந்தது.

எனினும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் சிறந்த வரவேற்பினை வழங்கி வந்ததை தொடர்ந்து விலைக்கழிவு வழங்கும் தினத்தினை நீடித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 14ம் திகதிவரை இச் சலுகை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 279.99 டொலர்கள் பெறுமதியான குறித்த கைப்பேசியினை தற்போது 229.99 டொலர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இக் கைப்பேசியானது 5.2 அங்குல அளவுடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம், 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3,000 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்