முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான ZTE ஆனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
தவிர Qualcomm Snapdragon 425 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3,000 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
கூகுளின் Android 7.1.1 Nougat இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் WiFi, Bluetooth, 4G LTE மற்றும் USB C ஆகிய தொழில்நுட்பங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.