ஆப்பிள் ஐபோன் எக்ஸில் பிரச்சனை: தொடர்ச்சியான புகார்களால் பரபரப்பு

Report Print Fathima Fathima in மொபைல்
285Shares
285Shares
lankasrimarket.com

ஆப்பிள் பிரியர்கள் மிக ஆவலோடு காத்திருந்து வாங்கிய ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேயில் பச்சை நிறக்கோடுகள் காணப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ஐபோன் எக்ஸ் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் போனின் டிஸ்ப்ளேயில் பச்சை நிறக்கோடுகள் காணப்படுவதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் கோளாறு மூலமாக இது ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

எனினும் மின்சார அமைப்புகளில் ஏற்பட்ட பிழை தான் இதற்கு காரணமாக இருக்கும் எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, போலந்து மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக ஐபோன் எக்ஸ் குளிர்ச்சியான சூழ்நிலையில் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்