Google Pixel 2 XL கைப்பேசிகளின் தொடுதிரையில் பிரச்சினை

Report Print Givitharan Givitharan in மொபைல்
32Shares
32Shares
ibctamil.com

கூகுள் நிறுவனம் அண்மையில் Pixel 2 மற்றும் Pixel 2 XL எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

இவ் இரு கைப்பேசிகளிலும் சில குறைபாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவற்றுள் ஒலிப் பிரச்சினை மற்றும் தொடுதிரைப் பிரச்சினை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

Pixel 2 XL கைப்பேசியின் விழிம்புகளில் தொடுகை தொழில்நுட்பம் செயற்படவில்லை என சில பயனர்கள் புகார் கூறியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது கூகுள் நிறுவனம் இப் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

எனினும் குறித்த கைப்பேசிகளின் அடுத்த பதிப்பிலேயே இப் பிரச்சினை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்