ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை அடுத்து மைக்ரோசொப்ட்டின் அதிரடி நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in மொபைல்

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் அப்பிளிக்கேஷனை சீனாவின் ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

இது தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சட்டங்கள் VoIP (Voice over IP) தொழில்நுட்பத்திற்கு இடையூறாக இருக்கின்றமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனமும் iOS சாதனங்களுக்கான சில அப்பிளிக்கேஷன்களை சீனாவின் ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து நீக்கியிருந்தது.

அதேபோன்று சீனாவுக்கான கூகுள் பிளே ஸ்டோரிலிருந்தும் சில அப்பிளிக்கேஷன்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்