நோக்கியா 9 கைப்பேசி எப்போது அறிமுகமாகும்? தகவல் வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கியா நிறுவனத்தின் புதிய அன்ரோயிட் கைப்பேசிகள் சிறந்த வரவேற்பினைப் பெற்று வருகின்றன.

இதனால் ஒரே வருடத்தில் தனது நான்கு புதிய கைப்பேசிகளை அந் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இவற்றின் வரிசையில் ஐபோன்களையே மிஞ்சும் வகையில் நோக்கியா 8, நோக்கியா 9 ஆகிய கைப்பேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் நோக்கியா 9 கைப்பேசியினை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜனவரி மாதம் 19ம் திகதி சீனாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகின்றது.

எனினும் நோக்கியா 8 கைப்பேசி அறிமுகம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்