அடுத்த அதிரடிக்கு தயாராகும் சோனி நிறுவனம்: கசிந்தது தகவல்!

Report Print Harishan in மொபைல்

பிரபல சோனி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ள சோனி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட நிலையில், கசியவிடப்பட்ட சில தகவல்கள் கீக்பென்ச் தளத்தில் தெரியவந்துள்ளது.

அத்தகவல்களின் படி புதிய சோனி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த புதிய மொடலுக்கு எக்ஸ்பீரியா XZ2 என சோனி நிறுவனம் பெயர் வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய எக்ஸ்பீரியா XZ2 ஸ்மார்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்டுடன் 5.48 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி வடிவமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3130 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவிக் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பெசல்-லெஸ் வடிவமைப்பு, டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, இரண்டிலும் 12 எம்பி கேமரா, போன்ற வசதிகளுடன் தோற்றத்தில் ஐபோன் X-க்கு போட்டியாக வரக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது.

குவிக் சார்ஜ் 4 வசதியுடன் வழங்கப்பட உள்ளதால், அந்த ஸ்மார்ட்போனினை 0-50% சார்ஜ் செய்ய 15 நிமிடங்களே போதுமானது. இந்த ஸ்மார்ட்போனில் 4K தர வீடியோ பதிவு செய்ய முடியும் என்றும் 720 பிக்சல் தரத்தில் ஸ்லோ-மோ வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்றும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய சோனி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்