அடுத்தவாரம் இந்தியாவில் களமிறங்கும் Honor View 10

Report Print Givitharan Givitharan in மொபைல்
49Shares
49Shares
ibctamil.com

Honor ஆனது Huawei நிறுவனத்தின் ஒரு துணை உற்பத்தி நிறுவனமாகும், இந்த நாமத்தினைக் கொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் Honor View 10 எனும் கைப்பேசி தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் அடுத்த வாரம் அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

5.99 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் Octa Core Kirin 970 Processor உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 6GB RAM 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவை தவிர கலர் சென்சார் கொண்ட 16 மெகாபிக்சல்களை உடையதும், மொனோகுரோம் சென்சாரை உடைய 20 மெகாபிக்சல்களை உடையதுமான டுவல் பிரதான கமெரா மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3750 mAh மின்கலம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் விலையானது 29,999 இந்திய ரூபா ஆக காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்