மீண்டும் கைப்பேசி விற்பனையில் களமிறங்கியது மைக்ரோசொப்ட் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in மொபைல்
83Shares
83Shares
lankasrimarket.com

சில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா நிறுவனத்தினை கொள்வனவு செய்திருந்த மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் இயங்குதளத்துடன் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்தது.

முதலில் நோக்கியா என்ற பெயரில் கைப்பேசிகளை அறிமுகம் செய்த போதிலும் பின்னர் மைக்ரோசொப்ட் என்ற பெயரிலேயே கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படும் லூமியா கைப்பேசிகளை மீண்டும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் Lumia 950 ஆனது 399 டொலர்களுக்கும், Lumia 950 XL கைப்பேசி 499 டொலர்களுக்கும், Lumia 650 கைப்பேசி 199 டொலர்களுக்கும், Lumia 550 ஆனது 139 டொலர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறெனினும் இக் கைப்பேசிகள் தற்போது ஒன்லைன் ஸ்டோரில் மாத்திரமே கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்