Nokia 8110 கைப்பேசியின் முழுமையான சிறப்பம்சங்கள் வெளியாகியது

Report Print Givitharan Givitharan in மொபைல்
145Shares
145Shares
lankasrimarket.com

நோக்கிய நிறுவனம் Nokia 8110 எனும் கைப்பேசியினை 4G LTE வலையமைப்பு தொழில்நுட்பத்துடன் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப் பெயரில் 1996ம் ஆண்டு நோக்கிய நிறுவனம் ஒரு வளைந்த கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே நவீன் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மீள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதில் 2.45 அங்குல அளவுள்ள QVGA வர்ண திரை தரப்பட்டுள்ளது.

KaiOS எனும் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியில் 1.1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Qualcomm Snapdragon 205 Dual-Core Processor, பிரதான நினைவகமாக 512MB RAM, 4GB சேமிப்பு நினைவகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் பேஸ்புக், டுவிட்டர், கூகுள் மேப், கூகுள் அஷிஸ்டன்ட் போன்ற அப்பிளிக்கேஷன்கள் இக் கைப்பேசியில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

தவிர 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 1500 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

இதன் விலையானது 79 யூரோக்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்