அறிமுகமாகியது Nokia வின் புதிய அதி தொழிற்நுட்ப கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
180Shares
180Shares
lankasrimarket.com

நோக்கியா நிறுவனம் தனது மற்றுமொரு புதிய கைப்பேசியான Nokia 8 Sirocco இனை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசி தொடர்பான அறிவிப்பினை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற Mobile World Congress நிகழ்வில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது சீனாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 ரெசொலூசன் உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Snapdragon 835 Mobile Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

மேலும் 13 மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3260 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் விலையானது இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்