உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த முழு தகவல்கள் இதோ

Report Print Kabilan in மொபைல்
207Shares

Huawei நிறுவனம் தயாரித்துள்ள, உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் வெளியீடு மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Huawei நிறுவனத்தின் 2018 Analyst Summit விழா, ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில், அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன.

அதில் 2019ஆம் ஆண்டில் தனது முதல் 5G ஸ்மார்ட்போனை Huawei நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Huawei-யின் சொந்த 5G Modem பயன்படுத்தப்பட உள்ளது.

மேலும், இந்த மொடலானது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Huawei Mate 20 எனும் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மொடல் ஆகும். இதன் பெயர் Huawei Mate 30 ஆகும்.

Huawei நிறுவனம், Mobilephone-களுக்கான பிரத்யேக 5G Modem ஒன்றை உருவாக்கி வருகிறது. இத்துடன் முழுமையான 5G சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் 5G மென்பொருள் தயாரானதும் வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில், சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உபகரணங்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

வருகிற 2025ஆம் ஆண்டு வாக்கில், சுமார் 110 கோடி 5G இணைப்புகள் இருக்கும் என்றும், 20 கோடி இணைக்கப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் Huawei நிறுவனம் எதிர்பார்க்கிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்