1TB வரையான சேமிப்பு வசதியுடன் Galaxy Note 9

Report Print Givitharan Givitharan in மொபைல்
133Shares
133Shares
ibctamil.com

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் ஹவாவி நிறுவனம் காணப்படுகின்றது.

அண்மைக் காலத்தில் அதிகளவான ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்ததன் ஊடாக இவ்வாறு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டிய நிலையில் சாம்சுங் நிறுவனம் இருக்கின்றது.

இதனால் அதிரடி வசதிகளை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவேண்டியுள்ளது.

இதற்காக விரைவில் அறிமுகம் செய்யவுள்ள புத்தம் புதிய கைப்பேசியான Galaxy Note 9 இல் 1TB வரையான சேமிப்பு வசதியினை தரவுள்ளது.

அடுத்த வாரமளவில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இக் கைப்பேசியில் நீண்ட நேரம் மின்சக்தியை தரவல்ல 4,000mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்