இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகமாகின்றதா iPhone X 2018

Report Print Givitharan Givitharan in மொபைல்
236Shares
236Shares
ibctamil.com

ஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ததில்லை.

இக் குறையைப் போக்கும் வகையில் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய கைப்பேசியில் இவ் வசதி உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் iPhone X 2018 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதில் iOS 12 இயங்குதளப் பதிப்பும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர இக் கைப்பேசியானது 6.1 அங்குல அளவுடைய LCD தொடுதிரையினைக் கொண்டிருக்கும் என ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.

அத்துடன் விலையானது 700 டொலர்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள போதிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்