கூகுளின் புதிய திட்டம்: அதிர்ச்சியில் கைப்பேசி பாவனையாளர்கள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

கடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன் டொலர்கள் நஷ்டஈடு செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

தனது அன்ரோயிட் இயங்குதளத்துடன் பயனர்களின் அனுமதியின்றி தனது ஏனைய அப்பிளிக்கேஷன்களை நிறுவி பிரபல்யப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை இதற்கு காரணமாகும்.

இதன் விளைவாக தனது அன்ரோயிட் இயங்குதளம் மற்றும் அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி கைப்பேசிகளை உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து பணத்தை அறவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் கூகுளிற்கு பணம் செலுத்த நேரடின் தாம் செலுத்தும் பணத்தை கைப்பேசி கொள்வனவு செய்பவர்களிடமிருந்து கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்கள் அறவிட நேரிடும்.

இதனால் கைப்பேசிகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனினும் இத் திட்டத்தினை ஐரோப்பிய நாடுகளிலேயே கூகுள் நிறுவனம் நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்