சாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது? இதோ கிடைத்தது பதில்

Report Print Givitharan Givitharan in மொபைல்

முன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் சாம்சுங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸமார்ட் கைப்பேசியினை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது.

இந்நிலையில் இக் கைப்பேசி எப்போது சந்தைக்கு வரும் என ஆவலுடன் எதிரபார்த்திருந்த கைப்பேசி பிரியர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

இதன்படி Samsung Galaxy F எனப்படும் இக் கைப்பேசியானது எப்போது அறிமுகம் செய்யப்படும் என அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் திரையானது 7.3 அங்குல அளவுடையதாவும், 2152 x 1536 Pixel Resolution உடையதாகவும் காணப்படும்.

எனினும் இதனை மடிக்கும்போது திரையில் அளவானது 4.6 அங்குலமாகவும் 1960 x 840 Pixel Resolution உடையதாகவும் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இக் கைப்பேசி தொடரபான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் அத் தகவல்களும் Mobile World Congress நிகழ்வில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers