அடுத்தவருடம் ஐபோன்களை அசெம்பிள் செய்ய தயாராகும் Foxconn

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனமானது இந்திய வாடிக்கையாளர்களுக்கான ஐபோன்களை இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்வதற்கு ஏற்கணவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இதற்காக Foxconn நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு முதல் ஐபோன்களை அசெம்பிள் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Foxconn நிறுவனமானது தற்போது Xiaomi Corp நிறுவனத்திற்காக கைப்பேசிகளை உருவாக்கி வழங்கிவருகின்றது.

அத்துடன் ஐபோன்களை அசெம்பிள் செய்வதற்காக தனது நிறுவத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு 25 பில்லியன் இந்திய ரூபாய்களை அந்நிறுவனம் முதலீடு செய்கின்றது.

இந்த முதலீட்டின் ஊடாக 25,000 வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers