விரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான ஹுவாவி Y7 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இக் கைப்பேசியில் 6.26 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதனுடன் Qualcomm Snapdragon 450 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

microSD கார்ட் உதவியுடன் சேமிப்பு நினைவகத்தினை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.

இதன் மின்கலமானது நீடித்து உழைக்கக்கூடிய 4000 mAh உடையதாக இருக்கின்றது.

இக் கைப்பேசியின் விலை 170 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்