AirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிளின் மொபைல் சாதனங்களில் AirPlay2 எனும் வசதி காணப்படுகின்றது.

இதன் மூலம் மொபைல் சாதனங்களில் உள்ள வீடியோக்கள், படங்கள் மற்றும் பாடல்களை தொலைக்காட்சிகளில் பார்த்து மகிழ முடியும்.

இதற்கு எவ்விதமான வயர் இணைப்பும் அவசியம் இல்லை.

Wi-Fi வலையமைப்பின் ஊடாக மொபைல் சாதனங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் பார்வையிட முடியும்.

இவ் வசதியானது தற்போது குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளில் மாத்திரமே காணப்படுகின்றது.

எனினும் விரைவில் மேலும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது தொலைக்காட்சிகளை AirPlay2 வசதியை ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு வடிவமைகை்கவுள்ளன.

இந்த தகவலை ஆப்பிள் நிறுவனமே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers