அதிரடி காட்ட தயாராகும் ஆப்பிள்: இந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இதேபோல இந்த வருடமும் 3 ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடமும் iPhone XR, iPhone XS மற்றும் iPhone XS Max போன்ற 3 ஐபோன்களை அறிமுகம் செய்திருந்தது.

இதேவேளை கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளின் விலையை விடவும் குறைந்த விலையிலேயே இந்த வருடம் அறிமுகமாகும் கைப்பேசிகளை விற்பனை செய்ய ஆப்பிள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசிகளின் விலை உயர்வாக இருப்பதால் விற்பனை வீழ்ச்சியை நோக்கிய நகரும் நிலையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்