49 மெகாபிக்சல் கமெரா தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Meizu Note 9 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

Meizu Note 9 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காரணம் இதன் கமெராவின் மெகாபிக்சல் ஆகும்.

இதில் Samsung ISOCELL GM1 சென்சாரினை உடைய கமெரா சென்சர் தரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 12 மெகாபிக்சல்களை உடைய கமெராவானது எடுக்கப்படும் புகைப்படத்தினை 49 மெகாபிக்சல்களை கொண்டதாக மாற்றும் திறனை கொண்டுள்ளது.

தவிர இக் கைப்பேசியானது 6.3 அங்ல அளவுடைய Full HD திரை, Qualcomm Snapdragon 675 Processor, 4000 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

எனினும் இதன் பிரதான நினைவகம் மற்றும் சேமிப்பு நினைவகங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதன் விலையானது 150 டொலர்களாக காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers