HOLE-LESS ஸ்மார்ட் போனை-ஐ விற்பனைக்கு கொண்டு வருகின்றது மீஸு நிறுவனம்

Report Print Abisha in மொபைல்

உலகின் முதல் HOLE-LESS ஸ்மார்ட்போன்மீஸு நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டகாசமான HOLE-LESS ஸ்மார்ட்போனிற்கானமுன் பதிவு மார்ச் மாதம் ஒன்றாம் திகதி துவங்குகிறது. இதற்காக indiegogo.comஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் இந்திய சந்தை மதிப்பு சுமார் ரூ.92,300என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 100 போன்கள் மட்டு வெளியிட்டு வாடிக்கையாளர்களின்தேவைகள் அறிய முற்படுகின்றது அந்த நிறுவனம்

HOLE-LESS மீஸு ஜீரோ ஸ்மார்ட்போன்இல் ஒரு துளைகள் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த HOLE LESS ஸ்மார்ட்போன்இல் பட்டன்கள் மற்றும் போர்ட்களுக்கென எந்தத் துளை இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய HOLE-LESS ஸ்மார்ட்போன் இல் அனைத்து சேவைகளும் டச்சென்சார்கள் மூலம் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு உகந்ததுபோல அதிநவீன தொழில்நுட்பத்தினால் மீஸு ஜீரோ HOLE-LESS ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.எம்சவுண்ட் 2.0 5.99' இன்ச் முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே,இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மீஸு ஜீரோ ஸ்மார்ட்போன்இல் பயன்படுத்தப்பட்டுள்ள mSound 2.0 "தொழில்நுட்பம் ஸ்பீக்கர் மற்றும் இயர்போன்ஆற்றலை இரட்டிப்பாக்க அனுமதிக்கிறது.

மீஸு ஜீரோ ஸ்மார்ட்போன் இல் 18W அதிவேக wireless சார்ஜ்ஜிங் சேவை வழங்கப்பட்டுள்ளது.இதில் சிம் ஸ்லாட் மற்றும் மெமரி ஸ்லாட் இல்லாத காரணத்தினால் eSIM சேவை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers