இந்தியாவில் அறிமுகமாகும் Oppo K1: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

Oppo நிறுவனம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் Oppo K1 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்திருந்தது.

இக் கைப்பேசி தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

குறித்த கைப்பேசியானது 6.4 அங்குல அளவு, 2340 x 1080 Pixel Resolution உடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 660 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 25 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய கமெராவும், 16 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராவும் தரப்பட்டுள்ளது.

மேலும் Bluetooth 5.0, WiFi, 4G LTE, 3500 mAh மின்கலம் ஆகியவற்றையும் கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 235 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers