ஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின்றமை தொடர்பில் ஏற்கணவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவற்றுள் சில கைப்பேசிகள் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவும் உள்ளன.

இவ்வாறிருக்கையில் TCL நிறுவனம் சற்று வித்தியாசமான வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

இதன்படி குறித்த கைப்பேசியினை வளைத்து ஸ்மார்ட் கடிகாரம் போன்று கையில் அணிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய கைப்பேசிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers