புதிய வர்ணத்தில் BlackBerry KEY2 ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் முன்னணியில் திகழ்ந்த பிளாக்பெரி ஆனது அன்ரோயிட் சாதனங்களின் வருகையை தொடர்ந்து சற்று சரிவை சந்தித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த வரிசையில் BlackBerry KEY2 எனும் புதிய கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதன் மற்றுமொரு பதிப்பு சிவப்பு நிறத்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியில் முன்னர் தரப்பட்டிருந்ததை விடவும் சேமிப்பு நினைவகத்தின் கொள்ளளவு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

அதாவது 128 GB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய கைப்பேசியின் விலையானது 749 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்