சில மாதங்களில் இமாலய சாதனை நிகழ்த்திய Mate 20 ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

Huawei நிறுவனம் சாம்சுங் மற்றும் ஆப்பிள் போன்ற முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு நிகராக வளர்ச்சியடைந்து வருகின்றது.

இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் Mate 20 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக்கைப்பேசிக்கு உலக அளவில் பலத்த வரவேற்பு காணப்பட்டது.

தற்போது இக்கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டு நான்கரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது.

அதாவது இதுவரை 10 மில்லியன் Mate 20 கைப்பசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் மொத்தமாக 200 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்