32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் சாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக்கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய Super AMOLED தொழில்நுட்பம் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இது தவிர பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவினையும், 32 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் ஆகியவற்றினை உடைய 3 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

மேலும் Android 9.0 Pie இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசியில் 4,500mAh உடைய மின்கலமும் தரப்பட்டுள்ளது.

இக்கைப்பேசி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்