இலங்கையில் அறிமுகமானது புதிய Huawei P-30 Pro

Report Print Gokulan Gokulan in மொபைல்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதன உற்பத்தியில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் ஹவாவே தனது புத்தம் புதிய மற்றுமொரு தயாரிப்பான Huawei பி-30 புரோ கையடக்கத் தொலைபேசியை இலங்கையில் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

இதற்கான நிகழ்வு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இப்புதிய Huawei கையடக்கத் அலைபேசியில் உலகின் முதலாவது Leica Quad Camera கட்டமைப்பையும், 40MP பிரதான கமராவையும், கொண்டுள்ள அதேவேளை, Huawei இன் உலகின் முதலாவது சுப்பர் ஸ்பெக்ட்ரம் சென்சர், 20MP அல்ட்ரா வைட் ஏங்கல் கமரா, 8MP டெலி போட்டோ கமரா உள்ளிட்ட பலவகையான அதிஉயர் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கிறது.

4200 mAh Battery மற்றும் 40W Huawei Super charge போன்றனவும் அடங்கியுள்ளன. இதனூடாக சாதனத்தை 30 நிமிடங்களில் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்துகொள்ளவும் முடிகிறது.

Huawei P30 Proஇன் இலங்கையில் அறிமுக விலை 179,999 ரூபாவாகும். பாவனையாளர்களுக்கு மிகவும் இலகு சூமிங் உடனான இந்த அலைபேசியில் மிக இருள்மிகு

நேரத்திலும்கூட கவர்ச்சிகரமான சுவாரஷ்ய புகைப்படங்களை எடுக்கவும் முடியும். பாவனையாளர்களுக்கு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ரொம் போன்ற அளவுகளிலும் கைபோசி கிடைக்கும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்