இரண்டு ஆண்டுகளுக்குபின் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 7

Report Print Kavitha in மொபைல்

ஐபோன் 7 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2016 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது.

அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், மேட் இன் இந்தியா திட்டத்தின் அங்கமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 7 மாடலை பெங்களூருவில அமைந்திருக்கும் விஸ்ட்ரன் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தாய்வானை சேர்ந்த விஸ்ட்ரன் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒப்பந்த முறையில் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. போன்ற மாடல்களை உற்பத்தி செய்துள்ளது. .

இந்நிலையில் இதே ஆலையில், ஐபோன் 7 மாடலின் உற்பத்தி மார்ச் மாதத்தில் துவங்கியது.

இந்தியாவில் ஐபோன் 7 உற்பத்தி துவங்கியிருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்படும் வாய்ப்புகள் குறைவு தான் என கூறப்படுகிறது.

மேலும் இந்திய உற்பத்தி மூலம் கிடைக்கும் தொகையை ஆப்பிள் நிறுவனம் விளம்பரம் மற்றும் விற்பனையில் முதலீடு செய்யலாம் என ஆப்பிள் வல்லுநர்கள் சார்பில் வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers