Android Q பதிப்பினை இந்த பழைய கைப்பேசிகளிலும் நிறுவிக்கொள்ள முடியும்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android Q இனை அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக புதிதாக அறிமுகம் செய்யப்படும் இயங்குதளப் பதிப்புக்களை சில பழைய கைப்பேசிகளில் பயன்படுத்த முடியாது.

ஆனால் சீனாவின் OnePlus நிறுவனத்தின் முன்னைய கைப்பேசிகளில் சிலவற்றிலும் இப் பதிப்பினை பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இதற்காக சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

அதாவது OnePlus 6 மற்றும் OnePlus 6T ஆகிய கைப்பேசிகளில் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நிறுவக்கூடியதாக இருக்கும் எனவும், அதன் பின்னர் OnePlus 5 மற்றும் OnePlus 5T ஆகிய கைப்பேசிகளில் நிறுவக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது OnePlus நிறுவனம் OnePlus 7 Pro மற்றும் OnePlus 7 ஆகிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers