இவ்வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்

வழமை போன்று இவ் வருடமும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அளவில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யும் என அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சில தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இதன்படி இக் கைப்பேசிகளுக்கான தொடுதிரைகளை LG நிறுவனமே தயாரித்து வழங்குகின்றது.

இவை அனைத்தும் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகும்.

தற்போது அறிமுகமாகவுள்ள ஐபோன்களில் தொடுதிரை முழுவதும் Touch ID தொழில்நுட்பம் காணப்படும் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது தவிர முப்பரிமாண கமெரா தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் எனவும், 5G மொபைல் தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்