ஹுவாவியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்

அமெரிக்காவில் ஹுவாவி நிறுவனம் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையிலும் ஏனைய நாடுகளில் கொடிகட்டி பறந்துவருகின்றது.

இந்நிலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த வருடம் அறிவித்திருந்தது.

இதன்படி Mate X எனும் குறித்த கைப்பேசியினை வடிவமைப்பும் செய்துள்ளது.

எனினும் தற்போது இதன் அறிமுகத்தை சிறிது காலத்திற்கு பிற்போடுவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கைப்பேசியின் திரையினை மேலும் மேம்படுத்தி வெளியிடும் நோக்கிலேயே இவ்வாறு தாமதம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கைப்பேசியின் விலையானது 2,600 டொலர்கள் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இப்படியிருக்கையில் திரை மேம்படுத்தப்பட்ட பின்னர் விலையில் மாற்றம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers