விரைவில் அறிமுகமாகின்றது iPhone 11 ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனமானது இந்த வருடமும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தவறாது தனது புதிய ஐபோன்களை செப்டெம்பர் மாதத்தில் அறிமுகம் செய்து வருகின்றது ஆப்பிள் நிறுவனம்.

அதேபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் iPhone 11 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Verizon எனப்படும் பிரபல மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கும் நிறுவனம் தனது நாட்காட்டியின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி செப்டெம்பர் மாதத்தின் இறுதி வாரம் குறித்த நாட்காட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், iPhone Launch எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அதற்கு அடுத்த மாதமான அக்டோபர் மாதத்தில் கூகுள் பிக்செல் 4 கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்