தொடுதிரையினுள்ளே செல்ஃபி கமெரா: அசத்தும் புதிய Oppo ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

பட்ஜட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசிகளை Oppo நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த வரிசையில் தொடுதிரையினுள்ளே செல்ஃபி கமெராவை கொண்ட உலகின் முதலாவது கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் Pop-Up எனப்படும் கைப்பேசியின் உள்ளே இருந்து வெளிவரும் செல்ஃபி கமெராவினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் Under Screen எனப்படும் திரையின் பின்னால் உள்ள கமெரா அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த தகவலை Oppo India தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்