ஆப்பிளின் மற்றும்மொரு சிறப்பம்சத்தை நகல் செய்யும் Xiaomi

Report Print Givitharan Givitharan in மொபைல்

உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் Xiaomi நிறுவனமும் ஒன்றாகும்.

எனினும் இந்த நிறுவனம் ஆப்பிளின் ஐபோன்களில் உள்ள வசதிகளை நகல் செய்தே கைப்பேசி வடிவமைப்பில் ஈடுபடுவதாக கூறப்பட்டு வருகின்றது.

இப்படியிருக்கையில் தற்போது மற்றுமொரு சிறப்பம்சத்தினை ஆப்பிளிடமிருந்து Xiaomi நகல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி iOS 12 பதிப்பில் தரப்பட்டிருந்த Memoji வசதியே நகல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இருந்தபோதிலும் Memoji என்பதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி Mimoji என்ற பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளது.

Memoji ஆனது ஆப்பிளின் FaceTime மற்றும் குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷன்களில் பயன்படுத்தப்படும் வசதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்