புதிய ஐபோன்களில் வரவுள்ள மாற்றம்: இந்த நாட்டில் உள்ளவர்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஐபோன்களில் ஏற்கனவே Finger Print ஸ்கானர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இப்படியிருக்கையில் இவ் வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன்களில் இவ் வசதியில் சிறிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அதாவது வழமையாக தொடுதிரைக்கு கீழாக தரப்பட்டிருந்த Finger Print Scanner வசதி தற்போது தொடுதிரையினுள்ளே உள்ளடக்கப்படவுள்ளது.

எனினும் இம் மாற்றம் சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன்களில் மாத்திரமே தரப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை Face ID தொழில்நுட்பம் ஆனது செலவு குறைந்தாக இருக்கின்ற போதிலும், இத் தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்தப்படும் Laser Light Emiter உபகரணத்தின் விலை அதிகமாகும்.

இது ஐபோன்களின் உற்பத்தி விலையை அதிகரிக்கச் செய்யும்.

எனவே புதிய ஐபோன்களில் Face ID தொழில்நுட்பம் நீக்கப்படலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...