விலை உயர்ந்த ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது நோக்கியா

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கியா நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த சில வருடங்களாக அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.

இக் கைப்பேசிகளுக்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.

இந்நிலையில் தனது விலை உயர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அந்நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

நோக்கியா 9 எனும் குறித்த கைப்பேசியானது 5 லென்ஸ்களை கொண்ட ரியர் கமெராவினை உள்ளடக்கியிருப்பது விசேட அம்சமாகும்.

இக் கைப்பேசியானது 5.99 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதன் பிரதான நினைவகம் 6GB ஆகவும், சேமிப்பு நினைவகம் 128GB ஆகவும் இருப்பதுடன் 12+12+12+12+12 MP கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது இந்திய பெறுமதியில் 49,999 ரூபாய்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்