விரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற மெபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் Huawei Mate X மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அதன் பின்னர் ஹுவாவி நிறுவனம் அமெரிக்காவில் எதிர்நோக்கிய தடையின் விளைவாக குறித்த கைப்பேசியினை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

தற்போது வரை தடை நீக்கப்படாத நிலையில் விரைவில் குறித்த கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இக் கைப்பேசியானது 8 அங்குல அளவு, 2480 x 2200 Pixel Resolution உடைய OLED தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர பிரதான நினைவகமாக 6GB, 8GB மற்றும் 12GB RAM எனும் மூன்று வகை தெரிவுகளிலும், சேமிப்பு நினைவகமாக 128GB, 256GB மற்றும் 512GB எனும் தெரிவுகளிலும் கிடைக்கப்பெறும்.

இதில் 40 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் என 3 கமெராக்களை தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்