முன்பதிவில் அசத்தும் ஸ்மார்ட் கைப்பேசி: எது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

Asus நிறுவனம் ROG 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

எனினும் இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

இந்நிலையில் இதுவரையில் சுமார் 2 மில்லியன் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6.59 அங்குல அளவுடையதும், 2340 x 1080 Pixel Resolution உடையதுமான AMOLED தொழில்நுட்பத்தினால் ஆன திரையைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 855+ Processor, பிரதான நினைவகமாக 12GB RAM மற்றும் 512GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் 48 மெகாபிக்சல்கள், 13 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்களையும் 24 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவையும், 6000 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்