இணையத்தில் லீக்கான ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் மாடல்! இதில் இத்தனை சிறப்பம்சம் உள்ளதா?

Report Print Kavitha in மொபைல்

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மேட் 30 ஸ்மார்ட்போன் மற்றும் 5ஜி வேரியண்ட் ஒன்றும் அறிமுகமாகும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மேட் 20 சீரிசின் மேம்பட்ட மாடலான மேட் 30 ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின்விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை வெளியாகியான தகவல்களில் படி மேட் 30 சீரிஸ் ஸ்மார்ட்போனில் குவாட்-கேமரா செட்டப் சதுரங்க வடிவில் பொருத்தப்படும் எனவும் இது பார்ப்பதற்கு மேட் 20 சீரிஸ் போன்று காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி புதிய மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இதில் இரண்டு 40 எம்.பி. சென்சார்கள், ஒரு 8 எம்.பி. சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதன் 40 எம்.பி. கேமராவில் 1/1.5” சென்சார், f/1.4 கொண்டிருக்கும். இத்துடன் RYYB பிக்சல் லே-அவுட் வழங்கப்படும் என தெரிகிறது.

இரண்டாவது 40 எம்.பி. கேமரா அல்ட்ரா-வைடு லென்ஸ் 120 டிகிரி ஃபீல்டு-ஆஃப்-வியூ மற்றும் 1/1.7” சென்சாரும் மூன்றாவது 8 எம்.பி. கேமராவில் டெலிபோட்டோ லென்ஸ் 5X சூம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புது ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers