முதன் முறையாக அதிக வினைத்திறன் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் சாம்சுங்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசி வரலாற்றில் முதன் முறையாக அதிக வினைத்திறன் கொண்ட இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

Galaxy Note 10 மற்றும் Galaxy Note 10+ ஆகிய கைப்பேசிகயே அவையாகும்.

Galaxy Note 10 கைப்பேசியானது பிரதான நினைவகமாக 8GB RAM, 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை கொண்டுள்ளது.

இதன் விலையானது 949 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Galaxy Note 10+ கைப்பேசியானது பிரதான நினைவகமாக 12GB RAM, 512GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.

இதன் விலை 1,199 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதேவேளை 256GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட Galaxy Note 10+ கைப்பேசியும் அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், இதன் விலை 1,099 டொலர்கள் ஆகும்.

எதிர்வரும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் இக் கைப்பேசிகளை கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்