சீனாவில் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி பிராண்டின்

Report Print Kavitha in மொபைல்

சீனாவின் TENAA வலைத்தளத்தில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் லீக் ஆகியுள்ளது.

ரியல்மி எக்ஸ் 256 ஜி.பி. மெமரி வேரியண்ட் சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக சீனாவில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்தியாவில் ரியல்மி எக்ஸ் 4 ஜிபி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜிபி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது

இவற்றின் விலை முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றில் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்களும் முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இது முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷனும் கிடைக்கிறது எனப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers