iPhone 11 அறிமுகமாகும் திகதி வெளியானது: எப்போது முன்பதிவு செய்யலாம்?

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனமானது வழமை போன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் தனது ஐபோன்களை அறிமுகம் செய்கின்றது.

இதனை ஓரளவு ஊகிக்க முடிந்தாலும் அறிமுகம் செய்யப்படும் திகதி இதுவரை வெளியாகியிருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்படும் திகதி மற்றும் முன்பதிவு செய்யப்படும் திகதி என்பன வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

அதேபோன்று அதே மாதம் 13 ஆம் திகதியிலிருந்து முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் வருடம் iPhone 11, iPhone 11 Pro மற்றும் iPhone XR2 ஆகிய மூன்று ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers