Nokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கிய நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Nokia 7.2 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அதன் வடிவம் தொடர்பாகவும் தகவல்கள் ஏற்கணவே வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 6.3 அங்குல அளவு, 2340 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொழில்நுட்பத்தினாலான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 660 Mobile Processor, பிரதான நினைவகமாக 4GB அல்லது 6GB RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

அத்துடன் 48 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் கொண்டுள்ளது.

தவிர Andrid Pie இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 3500 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers