உத்தியோகபூர்வமாக அறிமுகமானது Xiaomi Mi 9T கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீனாவை சேர்ந்த பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Xiaomi அட்டகாசமான வசதிகளுடன் கூடிய Mi 9T கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

முதன் முதலாக ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியானது 6.39 அங்குல அளவு, 2340 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 855 Processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM, 64GB, 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 20 மெகாபிக்சல்களை உடைய பொப் அப் செல்ஃபி கமெரா தரப்பட்டுள்ளது.

இதனுடன் 48 மெகாபிக்சல்கள், 13 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

இக் கைப்பேசியானது Android 9.0 Pie இயங்குதளத்தினை பின்பற்றி உருவாக்கப்பட்ட MIUI 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், 4000 mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்