iPhone பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி

Report Print Givitharan Givitharan in மொபைல்

குறுஞ்செய்தி பரிமாற்றங்களின்போது பயன்படுத்தப்படும் ஈமோஜிக்களுக்கு மொபைல் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.

இதேபோன்று முப்பரிமாண வடிவில் மீமோஜி எனப்படும் சுவாரஸ்யமான உருவங்களை ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தது.

இதனை மொபைல் குறுஞ்செய்தியில் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

இதனால் வாட்ஸ் ஆப் பயனர்கள் மீமோஜிக்களை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்துவதற்கு ஆவலாக இருந்தனர்.

இவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஐபோன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப்பில் மீமோஜி வசதி தரப்பட்டுள்ளது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு வாட்ஸ் ஆப்பின் iOS v2.19.90.23 பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்ய வேண்டும்.

இப் பதிப்பினை iPhone X, iPhone XS, iPhone XS Max மற்றும் XR என்பவற்றில் நிறுவி பயன்படுத்தலாம்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers