OnePlus 7 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் கசிந்தன

Report Print Givitharan Givitharan in மொபைல்

எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி OnePlus 7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான சிறப்பம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி 6.55 அங்குல அளவுடையதும் 2K Super AMOLED 90Hz தொழில்நுட்பத்தினைக் உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் இக் கைப்பேசியில் Qualcomm Snapdragon+ ரக Processor உள்ளடக்கப்பட்டுள்ளது.

இரு பதிப்புக்களாக வெளிவரும் இக் கைப்பேசியில் ஒன்று பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகத்தினையும், மற்றையது 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

அதேபோன்று 48 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள் மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களையும், 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers