LG Q70 கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் இதோ

Report Print Givitharan Givitharan in மொபைல்

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது தனது புத்தம் புதிய LG Q70 ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி இம் மாதம் இடம்பெறவுள்ள IFA 2019 நிகழ்வில் குறித்த கைப்பேசி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6.4 அங்குல அளவு, Full HD+ தொழில்நுட்பம் என்பவற்றினை உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 675 mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 32 மெகாபிக்சல்கள், 13 மெகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 4,000mAh மின்கலத்தினையும் கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 450 டொலர்களாகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers