iPhone 11 கைப்பேசியை அறிமுகம் செய்யும் நிகழ்விற்குரிய திகதி வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் வழமைபோன்று இந்த வருடமும் செப்டெம்பர் மாதமே தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசிகள் விற்பனைக்கு வருவதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்படும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமாகும்.

இதன்படி இம் மாதம் 10 ஆம் திகதி iPhone 11 Event நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது சிலிக்கன் வேலியிலுள்ள Cupertino எனும் பகுதியில் அமைந்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது மூன்று வகையான கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படும் என நம்பப்படுகின்றது.

அதேபோன்று 13 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யக்கூடியதாகவும், 20 ஆம் திகதி முதல் குறித்த கைப்பேசிகளை கொள்வனவு செய்யக்கூடியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers