ஆப்பிள் நிறுவனமானது ஏற்கனவே குறைந்த விலையில் iPhone SE எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.
இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இக் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வருடம் மூன்று ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அவற்றின் விலையானது மிகவும் அதிகமாகவே இருக்கும்.
எனவே வாடிக்கையாளர்கள் குறைந்த விலையிலும் ஐபோன்களை கொள்வனவு செய்யும் முகமாகவே இக் கைப்பேசி மீளவும் அறிமுகம் செய்யப்படுகின்றது.
அதாவது இதன் விலையானது 399 டொலர்களாக இருக்கும்.
ஆனால் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள கைப்பேசிகள் 1,000 டொலர்களிலும் அதிகமாகவே இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.